'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் |
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் போஸ் வெங்கட், தினேஷ், பரத் ஆகியோர் 3 அணிகளாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ் தனியாக தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகிறார்.
தற்போது சங்கத்தின் செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், போஸ் வெங்கட் போட்டியிடும் செயலாளர் பதவிக்கு பரத் அணி சார்பாக நவீந்தர் போட்டியிடுகிறார். போஸ் போட்டியில் இருந்து விலகி உள்ளார். போஸ், ரவீந்தர் இருவருமே ஆளும் கட்சி அனுதாபிகள் என்பதால் இருவரில் ஒருவர் விலகி கொள்ளுமாறு வந்த உத்தரவால் போஸ் விலகியதாக கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் போஸ் வெங்கட்டுக்குப் பதிலாக நடிகை நிரோஷா செயலாளர் பதவிக்கு மனு செய்துள்ளார்.