நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை |
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெடுநல்வாடை படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி நாயர். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிக்க வந்தார். அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது அவர் விகரம் பிரபு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நெடுல்வாடை படம் வெளிவந்த உடன் நடிக்கத் தொடங்கிய படம் இது. கொரோனா காலத்தால் தாமதமாகி இப்போது வெளியாகி உள்ளது. அதனால் சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். டாணாக்காரன் படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ரைட்டராக நடித்திருக்கிறேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபுவை காதலிக்கிற மாதிரியான கதை. போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இயக்குனர் சொல்லியபடி நடித்தேன். கிளாமராக நடித்து பெயர் வாங்க விரும்பவில்லை. நல்ல சவாலான கதைகளில் நடித்து பெயர் வாங்கவே விரும்புகிறேன். என்றார்.