தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் டார்லிங் படத்திற்குப் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும், மரகத நாணயம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இடியட் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகிறது.
இதில், யாகவராயினும், மரகத நாணயம் படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிப்பட்டது. ஆனால், இருவரும் தொடர்ந்து மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள நிக்கி கல்ராணியின் பிளாட்டில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் நெருங்கியவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக நிக்கி கல்ராணி கூறுகையில், ‛எனக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமண தேதி குறித்து இருவரின் குடும்பத்தார்களும் கலந்து பேசிய பின் முடிவெடுக்கப்படும். திருமண தேதியை விரைவில் நானும் ஆதியும் விரைவில் முறைப்படி அறிவிப்போம்' என்றார்.