நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஐரோப்பாவில் நடக்கும் கார் ரேசில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், இந்த மாதம் ஆதிக் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அந்த படம் பைனான்ஸ் சிக்கல்கள் காரணமாக இப்போதே தடுமாறுவதாக கேள்வி. அஜித் அதிக சம்பளம் கேட்பதாலும், குட் பேட் அக்லி பட பிஸினஸ் காரணமாகவும் பட அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்களாம். விரைவில் இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு செப்டம்பர் மாதம் புதுப்பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், ஆதிக் இணையும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார். அஜித் 170 கோடிக்கும் அதிகமான சம்பளம் கேட்டதால் பல தயாரிப்பாளர் ஒதுங்கிவிட்ட நிலையில், அஜித் ரசிகரான ராகுல் படம் தயாரிக்க முன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, வலிமை படத்தில் போனி கபூர் டீமில் ராகுல் இருந்துள்ளார், அஜித்துக்கு நன்கு அறிமுகமானவர். ஆகவே, நண்பருக்காக சம்பள விஷயத்தில் அஜித் கொஞ்சம் இறங்கி வருவார் அல்லது சில சலுகைகளை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் 55வது பிறந்தநாளான, அடுத்த ஆண்டு மே1ல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையே அஜித் ரேஸில் பிஸியாக இருப்பதால் இந்த படம் துவங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ஒரு தகவலும் உலா வருகிறது. மேலும் படத்தை தயாரிக்கும் ராகுலுக்கு பதில் வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வருகின்றன. எது உண்மை என படம் அறிவிப்பு வெளியாகும்போது தெரியவரும்.