பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

விக்ரம் பிரபு கேரியரில் மிக முக்கியமான படமாக இருந்தது 'டாணாக்காரன்'. போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தமிழ் இந்த படத்தை இயக்கினார். இயக்குனர் தமிழ் காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால் தான் சந்தித்த உண்மை சம்பவம் ஒன்றை 'சிறை' என்கிற பெயரில் எழுதியுள்ளார். அந்தக் கதை 'சிறை' என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகி உள்ளது.
இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு, எல். கே.அக்ஷய் குமார் நடிக்கிறார்கள். நாயகியாக அனந்தா நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கூறும் போது "முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். முற்றிலும் புதிய களத்தில் புதிய கதையாக இந்த படம் அமையும். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுக்கும்" என்றார்.