இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார்.
அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு முன் பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது மம்முட்டியை வைத்து மீண்டும் பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தான் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார். எண்பதுகளில் மம்முட்டி நடித்த மிருகயா என்கிற படத்தை தமிழில் சூர்யாவை வைத்து ரீமேக் செய்யலாம் என சில வருடங்களுக்கு முன்பே அமல் நீரத் முயற்சித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.