ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன் மற்றும் பலரது நடிப்பில் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'.
இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே டீசர் வீடியோவெல்லாம் வெளியிட்டு அசத்தினார் கவுதம் மேனன். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீசர், 4 வருடங்களுக்கு முன்பு மற்றொரு டீசர், 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு டீசர், 2 ஆண்டுகளுக்கு முன்பு 'ஒரு மனம்…' சிங்கிள், என அடுத்தடுத்து வெளிவந்ததால் அப்போதெல்லாம் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட கவுதம் மேனன் அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறார். அந்த விதத்தில் சமீபத்தில் 'துருவ நட்சத்திரம்' சம்பந்தப்பட்ட பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தை எடிட் செய்து பார்த்ததில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் கூட நன்றாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார்களாம். முதல் பாகத்திற்கான காப்பியை சீக்கிரமே ரெடி செய்து விடலாம் என்றும் தகவல். இரண்டாம் பாகத்திற்கு மட்டும் சில காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளதாம். முதல் பாகம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.