மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வினோத் இயக்கத்தில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் பிப்ரவரி 24ம் தேதி வெளிவந்தது. இன்றுடன் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் நிறைவடைகிறது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படமாக இருந்தால் கூட இரண்டு வாரங்களைக் கடப்பது அபூர்வமாகவே உள்ளது. அந்த விதத்தில் 'வலிமை' படம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி என்று சொல்லப்பட்டது.
ஆனால், 'ஜெய் பீம்' பட சர்ச்சை காரணமாக, சில மாவட்டங்களில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிட வேண்டாம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பிரமுகர்கள் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். எங்கே தங்களது தியேட்டர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயந்துள்ள அந்த மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்காரர்கள் பிரச்சினையை சமாளிக்க 'வலிமை' படத்தை 3வது வாரத்திலும் தொடர முடிவு செய்துள்ளார்களாம்.
'வலிமை' படம் நன்றாக ஓடுகிறது, அதனால் தூக்க முடியவில்லை. சூர்யாவுக்கும், 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கும் எங்களது வாழ்த்துகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமாளிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், 'வலிமை' படத்திற்கு ஒரு காட்சிக்கு பத்துப் பதினைந்து பேர்தான் வருகிறார்களாம். 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வேண்டாம் என்று சொன்னால் அதன்பின் அவர்களால் 'பீஸ்ட்' படத்தை வாங்கி திரையிட முடியாது. எனவே தான் இப்படி சமாளிக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
'எதற்கும் துணிந்தவன்' படத்தைத் தைரியமாக வெளியிடும் சில தியேட்டர்களில் பிரச்சினை எதுவும் எழவில்லை என்றால் உடனடியாக அவர்கள் 'வலிமை' படத்தைத் தூக்கிவிட்டு, 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறார்களாம்.