ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வழக்கமான டூயட் பாடும் கதாநாயகியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத நடிகை வரலட்சுமி, வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனி டிராக்கில் பயணித்து வருகிறார். அதனால் இவர் கைவசம் எப்போதும் படங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அதுமட்டுமல்ல தென்னிந்திய அளவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பும் இருக்கிறது. அந்த வகையில் கன்னடத்தில் 'ஹனு மான்' என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
வரலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டு, வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியுள்ளார். இந்த படத்தில் அஞ்சம்மா என்கிற வீரப்பெண்மணியாக நடித்துள்ளார் வரலட்சுமி. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பட்டுச்சேலை கட்டி திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் வரலட்சுமி, கையில் தென்னங்குலையுடன் எதிரிகளை பந்தாட தயாராக நிற்பது போன்று காட்சியளிக்கிறார். வரலட்சுமியின் இந்த அஞ்சம்மா அவதாரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார்.