இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் ஆகியோரும், தெலுங்குத் திரையுலகிலிருந்து சிறப்பு விருந்தினகர்களாக நடிகர் ராணா டகுபட்டி, இயக்குனர்கள் பொயப்பட்டி சீனு, கோபிசந்த் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “தெலுங்கு ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த கொரோனா சமயத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை அகான்டா முதல் புஷ்பா வரை, பங்கார்ராஜு முதல் பீம்லாநாயக் வரைக் காட்டிவிட்டீர்கள். உங்களால்தான் எங்களுக்கும் நம்பிக்கை வந்தது, அதனால்தான் படத்தை நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
என்ஜிஓ ஆரம்பிப்பதற்கு சிரஞ்சீவிதான் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். நீங்கள் வலிமையும், சக்தியையும் கொடுப்பதால்தான் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் எல்லாம் சிறப்பானவை. இப்படத்தில் பிரியங்காவின் உழைப்பு மிகவும் அற்புதமானது. பல வருடங்களுக்கு முன்பு எனது கம்பெனியில்தான் பாண்டிராஜ் அவருடைய பயணத்தை ஆரம்பித்தார். நீண்ட நாட்களாக நல்லுறவுடன் இருக்கிறோம். எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்,” என்றார்.