துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
நடிகர் பிரகாஷ் ராஜ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கமர்சியல் படங்களில் நடித்தாலும் தன் மனதுக்கு பிடித்த மாதிரி படங்களில் நடிப்பதற்காக தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையே துவங்கியவர். அப்படி மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் என்கிற படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் செய்தார். இடையில் சில காலம் படங்கள் தயாரிக்காமல் இருந்த பிரகாஷ்ராஜ், தற்போது குஜராத்தியில் உருவாகி இந்தியில் வெளியாக இருக்கும் டியர் பாதர் என்கிற படத்தின் தென்னிந்திய ரீமேக் ரைட்ஸை வாங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிப்புல இந்த படத்தை ரத்தன் ஜெய்ன் என்பவர் குஜராத் மொழியில் தயாரித்துள்ளார். மார்ச் 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து விரைவில் இந்தியிலும் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி வெர்சன் இன் ரீமேக் ரைட்ஸை நடிகர் பிரகாஷ்ராஜ் வாங்கியுள்ளார் என்கிற தகவலை ரத்தன் ஜெய்ன் தெரிவித்துள்ளார் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து தயாரிக்க இருக்கிறாராம் பிரகாஷ்ராஜ்.