கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக 'ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்திற்கான டைட்டில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற ஏய் சினாமிகா என்கிற பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது என்பது நமக்கு முன்பே தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளை டைட்டிலாக ஏன் வைத்தேன் என்றும் அதுகுறித்து மணிரத்னத்திடம் தான் பேசியதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.
'சினமிகா என்றாலே கோபப்படுகிற பெண் என்று அர்த்தம். என்னுடைய கதைக்கு அதுதான் பொருத்தமான பெயராக தோன்றியது. டைட்டிலை முடிவு செய்ததும் இந்த விஷயத்தை மணிரத்னத்திடம் போன் செய்து கூறினேன். நான் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், தாராளமாக வைத்துக்கொள்.. அப்படியே எனக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூட போட்டுக்கொள் என தமாஷாக கூறினார்" என்று கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.