ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ஆர்யாவுக்கு மட்டுமல்ல, அதில் நடித்த பல நடிகர்களுக்கு புதிய வாசலை திறந்து விட்டுள்ளது. குறிப்பாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்கிற படத்தில் அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க தடுமாறிக்கொண்டு இருந்த நடிகர் சந்தோஷ் பிரதாப் மீது மிகப்பெரிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. அந்தப்படத்தில் ராமன் என்கிற குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சந்தோஷ் பிரதாப்.
அதேபோல அந்தப்படத்தில் வேம்புலி, டான்ஸிங் ரோஸ் ஆகிய கதாபாத்திரங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர். குறிப்பாக டான்ஸ் ஆடிக்கொண்டே பாக்ஸிங் செய்யும் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷபீர் கல்லரக்கல் ரொம்பவே பிரபலமானார். இந்தநிலையில் சமீபத்தில் சந்தோஷ் பிரதாப் அளித்த பேட்டி ஒன்றில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பியதாக ஒரு தகவலை கூறியுள்ளார்.
“அந்தப்படத்தில் ராமன் கதாபாத்திரத்திற்காக தான் ரஞ்சித் என்னை தேர்வு செய்தார்.. அந்த சமயத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் தேர்வாகவில்லை.. அதனால் அந்த ஸ்க்ரிப்ட்டை கேட்டு வாங்கி நானே டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிக்க டான்ஸ் எல்லாம் ஆடி பழகினேன்.. ஆனால் என்னுடையை நடிப்பை உதவி இயக்குனர் வீடியோ எடுத்துக்கொண்டு போய் இயக்குனரிடம் காட்டியுள்ளார். அதை பார்த்துவிட்டு, எனக்கு ராமன் கதாபாத்திரம் தான் சரியாக பொருந்தும் என இயக்குனர் ரஞ்சித் கூறிவிட்டார்” என கூறியுள்ளார் சந்தோஷ் பிரதாப்.
தற்போது ஹன்ஷிகா நடிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சந்தோஷ் பிரதாப். இதற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. .