பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சினிமாவில் கதாநாயகிகள் இரண்டு வேடங்களில் நடிப்பது எப்போதாவது தான் நடக்கும். அந்தவகையில் நடிகை தன்ஷிகா இப்போது முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‛மனோகரி' என பெயரிட்டுள்ளனர். முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து ஆகியோர் நடிக்கின்றனர். பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் இந்த படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இயக்குனர் நவாஸ் அகமது இயக்குகிறார். சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் சார்பில் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசை.
இவர் கூறுகையில், “நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி”. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. படப்பிடிப்பு கம்பத்தில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது'' என்றார்.