பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

பேராண்மை படத்தின் மூலம் கவனம் பெற்றவர் தன்ஷிகா. அதன் பிறகு மாஞ்சா வேலு, அரவாண், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தர். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து மீண்டும் பார்முக்கு வந்தார். ஆனால் அதன்பிறகும் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. கடந்த 2018ல் காத்தாடி, காலகூத்து படங்களில் நாயகியாக நடித்தார். கடைசியாக 2021ல் லாபம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பின் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி சில படங்களில் நடித்து வந்தார். சாய் பாபா பக்தையான அவர் தன் பெருக்கு முன்னால் சாய் என்று சேர்த்துக் கொண்டார்.
இடையில் சில காலம் வாய்ப்பு கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்த நிலையில் தற்போது உடல் எடையை சற்று கூட்டி புதிய தோற்றத்திற்கு வந்திருக்கிறார். இதையொட்டி அவர் நடத்திய போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு தனக்கென தனியாக புதிய மானேஜரையும் நியமித்துள்ளார்.