அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
1950களில் திராவிட இயக்கத் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது சீர்திருத்த திருமணம். இதற்கு கடும் எதிர்ப்பும் இருந்தது. இந்த காலகட்டத்தில் சீர்திருத்த திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்'. ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, டாம் எவல் நடித்த 'தி செவன் இயர் இட்ச்' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான படம்.
இந்த படத்தை தயாரிக்க அப்போதிருந்த பல ஸ்டூடியோக்கள் முன்வராதபோது இயக்குனர் கே.வி.ரெட்டி. ஜெயந்தி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தானே தயாரித்து, இயக்கினார். தமிழில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'பெல்லினாட்டி பிரமனாலு' என்ற பெயரிலும் தயாரானது. தெலுங்கில் பெரிய வெற்றியும், தமிழில் சுமாரான வெற்றியும் பெற்றது.
நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்தார். ஜமுனா, நாயகி. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர். பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கண்டசாலா இசையமைத்த இந்த படத்துக்குப் பாடல்களை, தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த படம் பேசியது.