23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கானா பாலா. ஆடி போனா ஆவணி என்ற ஒரு பாடல் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பிறகு பீட்சா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, சேட்டை என தொடர்ச்சியாக 100 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடி உள்ளார். ஏராளமான பாடல்களை எழுதியும் உள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கு பாடவோ, நடிக்கவோ பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் தனது வழக்கிறஞர் தொழிலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் வசிக்கும் புளியந்தோப்பு பகுதியின் 72வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா 4 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.