ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ஆச்சர்யா படமும் தள்ளிப்போகும் அதன் ரிலீஸ் தேதியும் என உதாரணம் சொல்லும் அளவுக்கு கடந்த வருடத்தில் இருந்து இப்போது வரை அந்த படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றி வைக்கப்பட்டு வருகிறது. கொரட்டால சிவா இயக்கத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராம்சரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தை ராம்சரணே தயாரித்தும் உள்ளார்.
கடைசியாக இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கோவிட் பரவல் மற்றும் 50 சதவீத மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என்கிற நிபந்தனை காரணமாக பிப்ரவரி 4ல் இந்த படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட இதே தேதியில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த படம் ஒரு மாதம் முன்னதாக மார்ச் 25ம் தேதியே வெளியாக இருப்பதால் ஏப்ரல் 29 ஆம் தேதியை ஆச்சார்யா படத்தின் ரிலீஸுக்காக கையில் எடுத்துக் கொண்டார் ராம்சரண். அந்தவகையில் அவரது இரண்டு படங்கள் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.