ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக, தற்போது கடந்த மாதம் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது இந்த வழக்கில் திலீப் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த மனுவின் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய வழக்கு தொடர்பாக தன்வசம் உள்ள 6 மொபைல் போன்களையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார் திலீப். இந்த நிலையில் இந்த மொபைல் ஒப்படைப்பை தொடர்ந்து தற்போது எதிர்பாராத ஒரு புதிய கோணத்தில் திலீப்புக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது
அதாவது திலீப் தன்னுடைய மொபைல்போன்களை அங்கமாலியை சேர்ந்த சலீஷ் என்பவர் கடையில் கொடுத்து சர்வீஸ் செய்வது வழக்கம். இந்த சலீஷ் கடந்த 2020 ஆகஸ்டில் ஒரு கார் விபத்தில் பலியானார். இவர் தனி ஒருவராக காரை ஓட்டிக்கொண்டு சென்றபோது சாலையில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி மரணம் அடைந்ததால் அது விபத்து வழக்காக பதியப்பட்டு, கொஞ்ச நாளிலேயே முடித்தும் வைக்கப்பட்டது
இந்தநிலையில் தற்போது திலீப்பின் மொபைல்போன்களை நீதிமன்றம் ஒப்படைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சலிஷின் சகோதரர், நடிகர் திலீப்பின் மொபைல் போன்களை தனது சகோதரர் தான் சர்வீஸ் செய்து வந்தார் என்றும், தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது அவரது மரணத்தில் கூட ஏதோ மர்மம் இருப்பது போல தோன்றுகிறது என்றும் எனவே போலீசார் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர்.
திலீப் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாகி வந்த பின்னர் தனது மொபைல் போனில் நடிகை கடத்தப்பட்டது சம்பந்தமான வீடியோக்களை பார்த்தார் என அவரது நண்பர் குற்றம் சாட்டியததன் அடிப்படையில்தான் தற்போது இரண்டாவதாக திலீப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கில் மொபைல் போன்கள் மூலமாக திலீப்பிற்கு இன்னும் ஒரு புதிய சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ளது.