நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா(79). இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர், இப்போது படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுப்பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாடலாசிரியர் வைரமுத்து இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
வைரமுத்து கூறுகையில், ‛‛நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு. எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம். மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு. கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம் பெறவும் வலம் வரவும் வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜா போன் மூலம் பாரதிராஜாவிடம் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.
வீடு திரும்பிய பாரதிராஜா
தன் உடல்நலம் குறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை : கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று(டிச., 31) இல்லம் திரும்பிவிட்டேன். நடேசன், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள், திரைத்துறையினர், அரசியல் பெருமக்கள், உறவுகள் ஆகியோருக்கும் நன்றி. பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்கள் அணிந்து பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.