தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இந்த படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் பீஸ்ட் படத்தில் டைரக்டர் செல்வராகவன் வில்லனாக நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
.
ஆனால் தற்போது படத்தில் செல்வராகவன் ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தான் இயக்கிய புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் அரசியல் குறித்த கருத்துக்களை சொன்ன செல்வராகவனை இந்த படத்தில் அரசியல்வாதியாகவே மாற்றி உள்ளார் நெல்சன் . அதோடு இந்த படத்தில் செல்வராகவன் வில்லத்தனமாக இல்லாமல் ஒரு ஜாலியாக வேடத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.




