மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா அலை ஒமிக்ரான் வடிவில் பரவியதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே என பல மாநில அரசுகள் அறிவித்தன. அந்த விதத்தில் தமிழக அரசும் இம்மாதத் துவக்கத்திலிருந்து 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி வழங்கியது.
இதனால், பொங்கலுக்கு வெளியாக வேண்டிய 'வலிமை', அதற்கடுத்த வாரங்களில் வெளியாக வேண்டிய சில படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன. இருப்பினும் சில சிறிய படங்கள் இந்த மாதத்தில் வெளியாகின. ஆனால், அவற்றிற்கு மக்கள் அதிகமாக வரவில்லை. அதிகபட்சமாக 100 பேர் வந்தாலே அதிகம் என்ற நிலையே இருந்தது. பெரும்பாலான தியேட்டர்கள் 10 அல்லது 20 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
முதலில் அவர்களுக்காக தியேட்டர்களில் படங்களைத் திரையிட்ட தியேட்டர்காரர்கள் போகப் போக தியேட்டர்களை மூட ஆரம்பித்தனர். ஒரு காட்சிக்கு 10, 20 பேர் வந்தால் மின்சார செலவு கூட கட்டுப்படியாகாது என்பதே உண்மை. எனவே, திறந்து வைத்தால்தானே பிரச்சினை, தற்காலிகமாக மூடி விட்டால் அந்த சில பேருக்காக படத்தை ஓட்ட வேண்டிய அவசியிமில்லை என பலரும் மூடிவிட்டார்களாம்.
ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர பெரும்பாலான சிங்கிள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சிறிய படங்களைப் பார்க்க மக்கள் விரும்பவில்லை. பெரிய நடிகர்களின் படங்களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
50 சதவீத இருக்கை இருந்தாலும் பரவாயில்லை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை நீக்கினால் மக்கள் வரலாம் என்றும் சில தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால் 'வலிமை' படத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறார்கள். அந்தப் படம் வந்தால்தான் மக்கள் மீண்டும் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.