தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! |
இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது செல்வராகவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேப்போன்று மலையாளம், மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திடீரென்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா என்னை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.