தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பழம்பெரும் நடிகை ரத்னா. எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவர் மாம்பழம் வேண்டும் என்றார். என்ற பாடலின் மூலம் புகழ்பெற்றவர். ஆனால் அதற்கு முன்பே 1964ம் ஆண்டு வெளியான தொழிலாளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அதன் பிறகு நாம் மூவர், சபாஷ் தம்பி, அன்று கண்ட முகம், இதயக்கனி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
74 வயதான ரத்னா, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 19ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் நேற்று தான் வெளியானது. ரத்னாவுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.