ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அதையடுத்து விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் என பலர் நடிப்பில் இயக்கியுள்ள படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மகான் படம் குறித்த ஒரு அப்டேட்டை பதிவிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதில் ‛எங்களுடைய மகான் படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. விரைவில் வெளியாகும். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்பட்டு ப்ரொமோஷன் வேலைகளும் தொடங்கப்படும்' என்று ஒரு புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியானது போன்று இந்த மகான் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அது குறித்து கார்த்தி சுப்புராஜ் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.