புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
செல்வராகவன் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சாணிக்காயிதம் மற்றும் திரவுபதி இயக்குனர் மோகனின் அடுத்த படம் இரண்டிலும் நாயகனாக நடித்து வருகிறார். விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வில்லனாக நடிக்க இருக்கிறார். ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷுக்கும் முக்கிய கதாபாத்திரமாம்.