பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
நகுல் சினிமாவில் நடிக்கும் போதே பிரபலமானாரோ இல்லையோ, சின்னத்திரையிலும், சோஷியல் மீடியாக்களிலும் மிகவும் பிரபலமான நபராக மாறி வருகிறார். அவர் பேசும் கருத்துகள் உடனடியாக வைரலாகி வருகின்றன. தனது தனிப்பட்ட விஷயங்களில் சீண்டப்பட்டு தான் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி பேசி வருகிறார்கள் என்றாலும், அதில் சமூக பார்வை இருப்பதால் பலரும் நகுல் மற்றும் ஸ்ருதிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ருதி ஆண், பெண் சமத்துவத்தை குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலரும் எதிர்மறையான கருத்துகளை பேசி வந்தனர். சொல்லப்போனால் அத்துமீறி ஸ்ருதியை பாடி ஷேமிங் செய்தனர். அவர்களுக்கு கணவனும் மனைவியும் சேர்ந்து பதிலடி கொடுத்தனர்.
ஆனால், நகுல் தனது மனைவியை கட்டுப்படுத்த வேண்டுமென்று பெண்களில் சிலரே கூறியுள்ளனர். இதனால் கடுப்பான நகுல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எல்லோரும் என் மனைவியை கட்டுப்படுத்தி வைக்க சொல்கிறீர்கள். நான் ஏன் என் மனைவியை கட்டுபடுத்த வேண்டும்?. நான் எப்படியோ அதே போல் தான் ஸ்ருதியும். பெண்களை எப்போதும் கட்டுப்படுத்தக் கூடாது, அப்படி நினைக்கவும் கூடாது. அவர்களுக்கும் சம உரிமையை உண்டு. இதைப்பற்றி எனக்கு அதிகமாக பெண்கள் தான் மெசேஜ் அனுப்புகிறார்கள் அதை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.