3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
தமிழில் தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் அவரது நண்பனாக ஒரு காமெடி வேடத்தில் அறி முகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்து வந்தபோதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக கமிட்டாகிவிட்டார்.அந்த வகையில் இதுவரை 19 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் 20ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற தகவல்கள் விரைவில் வெளிவர உள்ளன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பிறகு புதுச்சேரியில் நடக்கிறது.இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதோடு விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட போதும் தேதி குறிப்பிடப்படவில்லை.