'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்', மற்றொன்று பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதேஷ்யாம்'.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களில், 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதியும், 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டார்கள்.
அதனால், படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகிறார்கள். அதன் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். எனவே, இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.