ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு இப்படத்தில் இருக்கும் ரொமான்ஸ் பிடிக்காமல் போயிருக்கிறது.
அதனால்தான் முதல் நாளான நேற்று சுமார் 5 கோடி வரை மட்டுமே படம் வசூலித்துள்ளது. 'சாஹோ' படம் கூட முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் இவ்வளவு குறைவான வசூல் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கமர்ஷியல் மசாலா படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்தப் படம் திருப்தியளிக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முதல் நாள் வசூலாக 25 கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மொத்தமாக 200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதால் இப்படத்தின் மொத்த வசூல் 300 கோடியைக் கடந்தால் மட்டுமே படத்தில் லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள்.