லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் படம் ‛பீஸ்ட்'. நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜன., 13ல் வெளியாகும் இன்று அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் பீஸ்ட் பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சும்மாவே சமூகவலைதளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இப்போது இந்த இரு அறிவிப்பை வைத்து சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து மோதி வருகின்றனர்.