சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் |
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் அவருடன் ஹூயுமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா ,யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை இ4 என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் வாங்கியிருப்பதாக வலிமை படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜி ஸ்டுடியோ அறிவித்து உள்ளது. அதனால் வலிமை படம் தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.