பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருடைய அம்மா மேனகா முன்னாள் கதாநாயகி, அப்பா சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மலையாளத் திரையுலகத்தில் உள்ள பலருக்கும் கீர்த்தி தோழியாக இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து 2021 மற்றும் 2024க்கான நிர்வாகக் குழுவினர் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாகக் கலந்து கொண்டார். மோகன்லால், மம்முட்டி மற்றும் சில மலையாள நடிகர்கள், நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “அம்மா' கூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்கிறேன். எனது அபிமான நண்பர்கள், சக நடிகர்கள், நடிகைகளை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




