என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் பீஸ்ட் படத்திற்க்காக அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் பாடியுள்ள ஓப்பனிங் பாடலின் டீசர் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படம் தங்க கடத்தலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ பயிற்சி பெற்ற கமாண்டோவாக  நடித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. 
இதற்கு முன்பு தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை  போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்தும், அதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படத்தை  குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து நெல்சன் இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            