படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'புஷ்பா'.
இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இடையிலான காதல் காட்சி ஒன்றில் ஆபாசமான வசனங்களும், சில செய்கையும் இடம் பெற்றுள்ளது. படத்தில் ஒரு காட்சியில் ராஷ்மிகா வீட்டிற்கருகில் ஒரு வேனில் இருவரும் அமர்ந்து காதல் செய்யும் காட்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
'புஷ்பா' படத்தை குடும்பத்துடன் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தியேட்டர்காரர்களும் படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்களாம். அதனால், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிவிட படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே படத்தில் சமந்தா இடம் பெறும் பாடல் ஒன்றும், ராஷ்மிகாவின் பாடல் ஒன்றும் ஆபாசமான ஆடையுடன் படமாக்கப்பட்டுள்ளது. அதில் சமந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.