ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து நேற்று வெளியான 'புஷ்பா' படத்தில் ஒரே பாடலுக்கு கவர்ச்சி ஆடை அணிந்து செக்ஸியான நடன அசைவுகளுடன் நடனமாடி உள்ளார் முன்னணி கதாநாயகியாக சமந்தா. இப்பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே அனைத்து மொழிகளிலும் ஹிட்டானது.
தெலுங்குப் பாடல் மட்டும் ஒரே வாரத்தில் 4 கோடி பார்வைகளை யு-டியூபில் கடந்துள்ளது. தமிழில் 1 கோடி பார்வைகளையும், ஹிந்தியில் 97 லட்சம் பார்வைகளையும் கன்னடத்தில் 42 லட்சம் பார்வைகளையும், மலையாளத்தில் 15 லட்சம் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது.
எதிர்பார்த்தது போலவே இப்பாடலுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்ட வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.
மற்றொரு பக்கம் இப்படி தியேட்டர்களில் படமாக்கப்படும் பைரசி வீடியோக்களை சமந்தா வெளியிடலாமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.




