ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள 'புஷ்பா' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ள இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஒவ்வொரு மொழியிலும் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள்.
மும்பை, பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொழிக்கு ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவை அனைத்திலும் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொண்டார். அதேசமயம், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
படத்தில் ராஷ்மிகாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை. கடைசி நேரத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலைச் சேர்த்தார்கள். அந்தப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய ஹிட் ஆகிவிட்டது. சமந்தா அலையில் ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.




