ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா கஹெக்டே , செல்வராகவன், யோகிபாபு அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வருகிற புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் விஜய் பின்னணி பாடிய பாடல் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆக 2022ம் ஆண்டின் தொடக்கமே விஜய் ரசிகர்களுக்கு ‛பீஸ்ட்' கொண்டாட்டத்துடன் துவங்க உள்ளது.