நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னையில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தந்தார். தற்போது அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார். இதுப்பற்றி, ‛‛அனைவரின் வாழ்த்திற்கும் நன்றி. வீடு திரும்பிவிட்டேன், குணமாகி வருகிறேன். நீங்கள் இல்லாம நானில்லை'' என தெரிவித்துள்ளார் சிம்பு.