டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை அவந்திகா மிஸ்ரா. டில்லியை பூர்வீகமாகக் கொண்ட இவர் நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து மீகு மீரே மாகு மேமே படத்தில் நடித்தார். இதுதவிர வியாஷகம், மீகு மாத்திரமே செப்தா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அவந்திகா மிஸ்ரா புதுமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இது தவிர, நெஞ்சமெல்லாம் காதல் மற்றும் டி பிளாக் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி வரும் கல்லூரியை பின்னணியாகக் கொண்ட டி பிளாக் படத்தில் அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவந்திகா கூறியதாவது: நல்ல கதாபாத்திரங்களை எனக்கு வழங்கி வரும் சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் சவாலான வேடங்களையே நான் எதிர் நோக்குகிறேன். தெலுங்கு ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். திறமைகளை அங்கீகரிப்பதில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் அதே அன்பை நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நான் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் அவந்திகா.




