நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் |
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் , பிரபு இணைந்து தயாரித்துள்ள படம் க். பாபு தமிழ் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் பாபு தமிழ் கூறியதாவது: ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் பேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது. உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் பேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. என்றார்.