ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக, யுவன்சங்கர் ராஜா இசையில் 'நான் பார்த்த முதல் முகம் நீ' என தொடங்கும் பாடலை .விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தாயின் பெருமையை சொல்லும் விதமாக சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப்பாடல் நேற்றுமுன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “ இந்த பாடலை ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ... என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.. என்னுடைய அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்கு இருந்தது. இதன்மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்“ என கூறியுள்ளார்
இந்த பதிவு மூலமாக இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நாயகனின் அம்மாவும் போலீஸ் அதிகாரி தான். அதில் நடித்த ராதிகாவின் பெயரும் கூட மீனாகுமாரி தான். அந்தவகையில் தனது தாயின் பெயரையும் அவர் வகித்த பதவியையும் தான் அந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அதேசமயம், கதைப்படி மீனாகுமாரி என்கிற தனது தாயின் பெயருள்ள அந்த கதாபாத்திரத்தின் மருமகளாக நயன்தாரா வரவேண்டும் என கதை எழுதும்போதே எப்படி தீர்மானித்து இருப்பார் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் காதல், திருமணத்தில் இணையும்போது, அவர் எழுதிய கதையும் நிஜமாகி விடும் அல்லவா?