நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கன்னடத் திரையுலகின் மாஸ் ஹீரோவான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு கன்னடத் திரையுலகத்தினரை மட்டுமல்ல இந்தியத் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் நடித்துள்ள 'கந்தடா குடி' என்ற படத்தின் டைட்டில் டீசர் நேற்று புனித்தின் அம்மா மறைந்த பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. புனித்தின் அண்ணன் ஷிவராஜ்குமார், கேஜிஎப் நடிகர் யாஷ் இருவரும் இந்த டீசரை வெளியிட்டனர்.
இயற்கை, மண் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் படம் தான் 'கந்தடா குடி'. அமோகவர்ஷா இப்படத்தை இயக்கி புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் காடுகள், இயற்கைப் பகுதிகளில் அதன் பெருமையைச் சொல்லும் விதத்திலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது இந்தப் படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. 2022ம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி இப்படத்தைத் தயாரித்துள்ளார். கர்நாடகத் திரையுலகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் இந்த டீசரை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு புனித்தை நினைவு கூர்ந்துள்ளனர்.