டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஷ்வின். நிகழ்ச்சியில் அவரை அதிகம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக கோமாளியாக இருந்த ஷிவாங்கி நிறைய சுவாரசியமான விஷயங்களைச் செய்தார். அவைதான் அஷ்வின் மீதான ரசிகர்களின் கவனிப்பு அதிகம் வரக் காரணமாக இருந்தது. ஆனால், அவை தன்னால்தான் அதிகம் ஏற்பட்டதாக அஷ்வின் தப்புக் கணக்கு போட்டிருப்பார் போலிருக்கிறது.
அஷ்வின் கதாநாயகனாக நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அஷ்வின், “என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகிறாய்' மட்டும்தான்,” என்று பேசினார்.
தன்னிடம் கதை சொன்ன அந்த 40 பேரைக் கிண்டலடிக்கும் விதத்தில், அஷ்வினின் இந்தப் பேச்சு உதவி இயக்குனர்களிடமும், இயக்குனர்களிடமும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சில இயக்குனர்கள் அஷ்வினைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் உள்ளனர்.
அஷ்வின் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் இந்த அளவிற்கு திமிராகப் பேசுவதா என திரையுலகத்திலும் பலர் அவரைத் திட்டி வருவதாகவும் தகவல்.
தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அஷ்வின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.




