பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் பாடகர்களில் ரசிகர்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றவராக சித் ஸ்ரீராம் இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடிய பிறகு அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவரை அந்தப் பாடல் அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தில் ஒரு அற்புதமான அம்மா பாடலைப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில், விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ள 'நான் பார்த்த முதல் முகம் நீ…' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் முறை கேட்கும் போதே பாடல் ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அம்மாவின் பாசம், நேசம் என அனைத்தையும் பாடலில் கொண்டு வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். யுவனின் மென்மையான இசை அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது.
இப்பாடலைப் பற்றி பாடகர் சித் ஸ்ரீராம், “சாதனையாளர் அஜித்தின் 'வலிமை' படத்தில் இந்தப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது. சகோதரர் விக்னேஷ் சிவனின் உறைக்க வைக்கும் வரிகளை, சகோதரர், ஒப்பற்றவர் யுவனின் இசையில் பாடும் அனுபவம் எப்போதும் வியக்க வைக்கும். அனைத்து அம்மாக்களுக்கம் இந்தப் பாடல் காணிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.