கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது |
ஒரு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்குள் அந்தப் படம் பற்றிய தகவல்கள் திரையுலக வட்டாரங்களில் எப்படியாவது 'லீக்' ஆகிவிடும். விஜய் 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே அப்படம் பற்றிய தகவல்கள் வெளியானது. தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கில் அப்படம் உருவாகப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதற்குப் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் விஜய் 66 படத்தின் கதை இதுதான் என டோலிவுட் வட்டாரங்களில் 'லீக்' ஆகி உள்ளது. 'எரோடோமேனியா' என்ற ஒரு அரிய வகை மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாம் விஜய்க்கு. ஒரு பிரபலம், பெரும் பணக்காரர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக நினைத்துக் கொள்வாராம். ஆனால், அந்தப் பெண் உண்மையிலேயே அவரைக் காதலிக்க மாட்டாராம். இதுதான் படத்தின் மையக் கரு என்று பரவியுள்ளது.
இதுதான் ஆரம்பம், இன்னும் எத்தனை கதைகள் இப்படி ரவுண்டு வரப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.