ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏன், இந்தியத் திரையுலகத்திலேயே தங்களது அபிமான நடிகர்களின் அதி தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். ஒரு காலத்தில் சென்னையில் தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். இங்குதான் தெலுங்கு நடிகர்கள் வசித்து வந்தார்கள். திருப்பதிக்கு செல்லும் தெலுங்கு ரசிகர்கள் அப்படியே சென்னை வந்து தங்கள் அபிமான நடிகர்களைப் பார்க்கக் காத்துக் கிடப்பார்கள்.
அந்த ஆவல் தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. 'ராதே ஷ்யாம்' நடிகர் பிரபாஸின் அதி தீவிர ரசிகர் ஒருவர் அவரது தலையில் பிரபாஸ் என்ற ஆங்கில வார்த்தைகளில் மட்டும் முடியை டிசைன் செய்து மற்ற இடத்தை மொட்டை அடித்திருந்தார். அந்த ரசிகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரபாஸ் அவரை அழைத்து சந்தித்துப் பேசி அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பப் போகிறார்களோ ??....