முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
பாலிவுட்டில் தற்போதும் முன்னணி நடிகை வரிசையில் இருந்துகொண்டு பரபரப்பு செய்திகளில் இடம் பிடிப்பவர் நடிகை வித்யா பாலன். ஒரு காலகட்டத்தில் அவர் நடிக்கும் படங்கள் அவரைப் பற்றி பரபரப்பாக பேச வைத்தன. சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களும் மீடியாக்களில அவர் கொடுக்கும் பேட்டிகளும் ரசிகர்களிடம் அவரை பற்றி தொடர்ந்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யா பாலன் பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகருடன் மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை படமாக்குவதற்கு சற்று முன்பாக தான் அவர் சைனீஸ் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரத்திலேயே அந்த காட்சியில் அவர் நடிக்க வந்தபோது அந்த உணவு வாடை அப்படியே இருந்தது. அவரிடம் நீங்கள் பிரஷ் பண்ணவில்லையா என்று கேட்டதற்கு, எதற்காக என்று திருப்பி கேட்டார். உடனே அவரிடம் உங்களுக்கு பார்ட்னர் என யாராவது இருக்கிறாரா என்று கேட்டேன். அதன்பிறகு தான் அந்த நடிகர் புரிந்துகொண்டு சென்று பிரஷ் பண்ணி விட்டு வந்து நடித்தார்” என்கிற ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் வித்யா பாலன்.