விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி உடன் இணைந்து 'தலைவன் தலைவி' படத்தில் நடித்துள்ளார். இதை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். குடும்ப பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் வெள்ளியன்று ரிலீஸாகிறது. தற்போது இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி ஒரு பேட்டியில் "நான் மைதா வகையான உணவுகளை தவிர்த்து வந்தேன். குறிப்பாக பரோட்டாவையெல்லாம் சாப்பிடாமல் இருந்தேன். ஆனால் மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, என்னால் என் நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய பரோட்டா சாப்பிட்டேன். அத்துடன் பரோட்டா போடவும் கற்றுக் கொண்டேன். இது படத்துக்காக மட்டுமல்ல, படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பரோட்டா சாப்பிட்டேன்” என பரோட்டா கதையை கலகலப்பாக கூறினார்.