அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கமல் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகி வருகிறது விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவுபெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 17-ஆம் தேதி கோவையில் துவங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலையை தொடங்குகிறார்கள். இந்த படத்தை முடித்த கையோடு இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் கலந்து கொள்வார் என்கிறார்கள்.